ஜல்சக்தி அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0-ன் ஆயத்தநிலையை செயலாளர் (நீர்வளங்கள்) மதிப்பாய்வு செய்தார்; தீவிர துப்புரவு பணிகளுக்காக 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
Posted On:
30 SEP 2024 6:08PM by PIB Chennai
27.09.2024 அன்று சிறப்பு இயக்கம் 4.0-க்கான தயாரிப்புக்கான விரிவான ஆய்வுக் கூட்டத்திற்கு, ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை (WR, RD, GR) செயலாளர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி தலைமை தாங்கினார். அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைத்தல், தூய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் இந்த துறை மற்றும் அதன் அமைப்புகளின் கீழ் உள்ள சுமார் 400 இடங்கள் துப்புரவு நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு விரிவான செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் கழிவுகளை பிரித்தல், அபாயகரமான பொருட்களை அகற்றுதல் மற்றும் தூய்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நீண்டகால கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
இந்த ஆய்வின் போது, தூய்மைப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த திருமதி முகர்ஜி, இந்த இடங்களில் துரித முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். பொது இடங்கள், தொழிற்சாலை பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் உட்பட அடையாளம் காணப்பட்ட அனைத்து இடங்களும், போர்க்கால அடிப்படையில் துப்புரவு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது கழிவுகள், குப்பைகள் மற்றும் மாசுபடுத்திகளை விரைவாகவும் முழுமையாகவும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஆற்றுப்படுகை பகுதிகள், அணைப் பகுதிகள், குடியிருப்பு வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், தூய்மை முகாம்களை நடத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த இயக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சமூக ஊடக கையாளுதல்கள் உட்பட அனைத்து அமைப்புகளும் பிரச்சார காலத்தில் போதுமான ஊடக விளம்பரம் அளிக்கப்படும்.
கூட்டத்தில், நிறுவனங்கள் வாரியாக இலக்குகள் ஆராயப்பட்டன. துறை மற்றும் அதன் அமைப்புகளைச் சேர்ந்த மூன்றாம் தரப்பு அதிகாரிகளாக இருக்கக்கூடிய 'தூய்மை சேவகர்கள்' நியமிக்கப்படலாம் என்றும் துறை செயலாளர் அறிவுறுத்தினார்.
அடையாளம் காணப்பட்ட தளங்கள் அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கம், மாசுபாட்டின் அளவு மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கொடியிடப்பட்டன.
சுத்தமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான தேசிய இலக்கை பிரதிபலிக்கும் வகையில், இந்த இடங்களை சுத்தமான, சுகாதாரமான பகுதிகளாக மாற்றுவதற்கான துறையின் உறுதிப்பாட்டை திருமதி முகர்ஜி மீண்டும் வலியுறுத்தினார். அதேபோல், பல்வேறு பிரிவுகளின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
***
MM/AG/DL
(Release ID: 2060400)