புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சுற்றுச்சூழல் புள்ளிவிவரம் இந்தியா 2024 பற்றிய செய்திக் குறிப்பு

Posted On: 30 SEP 2024 4:32PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  சுற்றுச்சூழல் புள்ளிவிவரம் இந்தியா  2024: சுற்றுச்சூழல் கணக்குகள் வெளியீட்டின் தொடர்ச்சியான 7-வது இதழை 2024, செப்டம்பர் 30, அன்று சுற்றுச்சூழல் பொருளாதார கணக்கியல் அமைப்பின்  கட்டமைப்புக்கு இணங்க தொகுத்து வெளியிட்டது. இது சுற்றுச்சூழல் பொருளாதார கணக்குகளை தொகுப்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கட்டமைப்பாகும்.

தற்போதைய வெளியீடு கடல் கணக்குகள் என்ற புதிய பகுதியை உள்ளடக்கியது. இந்த அறிக்கை பெருங்கடல்களின் கணக்குகளைத் தொகுப்பதற்கான கட்டமைப்பை வழங்குகிறது. மேலும் பெருங்கடல்கள் தொடர்பான சில பரப்பளவுகள் மற்றும் நிலவர  அளவுருக்களுக்கான தரவுகளையும் வழங்குகிறது.

நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய அமைப்புகள், மத்திய மின்சார ஆணையம், தகவல் தொழில்நுட்ப மற்றும் அது சார்ந்த சேவை வழங்கல் அமைப்பான  எம்ஓ பவர் ஆகியவற்றால் வழங்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி எரிசக்திக்கான இயற்பியல் சொத்து கணக்குகள், இயற்பியல் வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது.

2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொத்த பாதுகாக்கப்பட்ட பகுதியின் எண்ணிக்கையில் சுமார் 72% அதிகரிப்பும், பரப்பளவில் சுமார் 16% அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.

கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கியமான துணை சுற்றுச்சூழல் அமைப்பான சதுப்புநிலக் காடுகளின் பரப்பு 2013 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் சுமார் 8% அதிகரித்துள்ளது.

எதிர்கால மேம்பாட்டுக்காசுற்றுச்சூழல் புள்ளிவிவரம் இந்தியா  2024 என்ற தலைப்பிலான வெளியீடு குறித்த உள்ளீடுகள்  ஆலோசனைகளை அமைச்சகம் வரவேற்கிறது.

---

SRI/LKS/KPG/RR/DL



(Release ID: 2060352) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi