புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திலும்  அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற நிறுவனங்களிலும் சிறப்பு இயக்கம் 4.0 

Posted On: 21 SEP 2024 10:05AM by PIB Chennai

 

2024 வரை தூய்மையை  நிறுவனமயமாக்குவதற்காகவும், அரசு அலுவலகங்களில் நிலுவைப் பிரச்சினைகளைக்  குறைப்பதற்காகவும், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள்  குறைதீர்ப்புத் துறை மூலம் சிறப்பு பிரச்சாரம் 4.0, 2024 ,அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடத்தப்படவுள்ளது. இதன்  ஆயத்தக் கட்டம் 16.09.2024 முதல் 30.09.2024 வரை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தில் அதன் இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் அதாவது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் , இந்திய சூரிய சக்தி நிறுவனம் லிமிடெட், மூன்று தன்னாட்சி நிறுவனங்கள் அதாவது தேசிய சூரிய சக்தி நிறுவனம், தேசிய காற்று சக்தி நிறுவனம், சர்தார் ஸ்வரன் சிங் தேசிய உயிரி எரிசக்தி நிறுவனம்ஆகியவற்றுடன் செயல்படுத்தப்படவுள்ளது.

ஆயத்தக் கட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளில் சில வருமாறு:

பல்வேறு நடைமுறைகள் மூலம் நிலுவைப் பிரச்சினைகள் கண்டறியப்படும்.

அரசு அலுவலகங்களில்  ஒட்டுமொத்த தூய்மை பராமரிக்கப்படும், அதற்காக இயக்கங்கள்  நடத்தப்படும்.

2024, அக்டோபர்முதல் அமலாக்கக் கட்டம் தொடங்கும். இதில், சிறப்பு இயக்கம் 4.0க்கான ஆயத்த கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

*****

SMB / KV

 

 


(Release ID: 2059956) Visitor Counter : 28


Read this release in: English , Marathi , Hindi