விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் திரு மார்ட்டின் ரைசரை புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்

Posted On: 28 SEP 2024 11:57AM by PIB Chennai

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் திரு மார்ட்டின் ரைசரை நேற்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார். வேளாண்மை,விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்னுரிமைகள், மண் வளம், பருவநிலைக்கேற்ற  விவசாயம், கார்பன் சந்தைகள், டிஜிட்டல் விவசாயத்திற்கான அணுகல் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிப்பது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.

வேளாண் துறையில் அரசின் முன்னுரிமைகள் குறித்து உலக வங்கி தூதுக்குழுவிடம் செயலாளர் எடுத்துரைத்தார். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவை அடைவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், நீடித்த வேளாண்மையை ஊக்குவிப்பது, சிறிய நில உடைமையின் சவாலை சமாளிப்பது ஆகியவற்றிற்கான  கொள்கைகளை அமல்படுத்துவதாகவும், விவசாயிகளுக்கு சேவைகள் வழங்குவதை மேம்படுத்துவதாகவும், நடத்தை மாற்றத்தை பெருமளவில் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

**************

SMB/KV

 

 



(Release ID: 2059795) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi , Marathi