எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆர்ஐஎன்எல் நிறுவனம் சார்பில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம்

Posted On: 27 SEP 2024 6:51PM by PIB Chennai

விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கார்ப்பரேட் நிறுவனமான ராஷ்ட்ரீய இஸ்பத் நிகம் லிமிடெட் (ஆர்.ஐ.என்.எல்) சார்பில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம் நடைபெற்றது. நிர்வாகத் துறையின் வேளாண் வனவியல் பிரிவின் கீழ் ஒரு தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினம் நேரு பூங்காவில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் பௌஹினியா மற்றும் அமல்டாஸ் வகைகளின் 492 மரக்கன்றுகள் நடப்பட்டன. விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் உக்குநகரம் டவுன்ஷிப் பகுதியில்  ஸ்வர்ண ஜெயந்தி பூங்காவில் 113 மரக்கன்றுகள் நடப்பட்டன. விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் 146 மரக்கன்றுகள் நடப்பட்டன.

உயர் அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோர் மரம் நடும் பணியில் தீவிரமாக பங்கேற்றனர்.

***

PLM/KPG/DL


(Release ID: 2059652) Visitor Counter : 30


Read this release in: Punjabi , English , Urdu , Hindi