பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சிறப்பு இயக்கத்தின் ஆயத்தக் கட்டத்தில் மத்திய அமைச்சகங்கள் தீவிர பங்கேற்பு

Posted On: 27 SEP 2024 12:44PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0-வின், ஆயத்தக் கட்டம் வேகம் பெற்றுள்ளது.  சிறப்பு இயக்கம் 4.0-வின் செயல்பாட்டுக் கட்டம்  2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக 2024 செப்டம்பர் 16  முதல் செப்டம்பர் 30 வரை ஆயத்தக் கட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆயத்தக் கட்டத்தில், அமைச்சகங்கள், துறைகள், இணைக்கப்பட்ட, அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளின் சார்பில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. களப்பணியாளர்களை ஈடுபடுத்துதல், நிலுவையில் உள்ள செயல்பாடுகளைக் கண்டறிதல், தூய்மை இயக்கத்திற்கான அலுவலகங்களின் பட்டியலை இறுதி செய்தல், அப்புறப்படுத்தப்பட வேண்டிய மின்னணு, மோட்டார் வாகன அலுவலக கழிவுகளின் அளவை மதிப்பீடு செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடங்கும். அலுவலக இடங்களை மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறைகள், கழிவுகளை அகற்றுவதற்கான நடைமுறைகள், சுகாதார நெறிமுறைகள், உள்ளடக்கிய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம் ஒரு பிரத்யேக இணையதளமான https://scdpm.nic.in/specialcampaign4/  மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து அமைச்சகங்களும், இந்த இயக்கத்தின் ஆயத்த கட்டத்திற்கான இலக்குகளை இந்த இணையதளத்தில் பதிவேற்றியுள்ளன. 2024 செப்டம்பர் 26 நிலவரப்படி, 55 அமைச்சகங்கள், துறைகளில் 1,64,268 தூய்மை இயக்கத் தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 12,78,740 இயற்பியல், மின்னணு கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 4,07,704 பொது மக்களின் குறை தீர்ப்புகள் தீர்வு கோரும் மேல்முறையீட்டு மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், அமைச்சகங்கள்,  துறைகளின் செயலாளர்கள் சிறப்பு இயக்கம் 4.0-வின் ஏற்பாடுகளுக்கு தலைமை வகித்துள்ளனர். சிறப்பு இயக்கத்தை மிகப் பெரிய வெற்றியாக மாற்ற பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

*****

(Released ID: 2059355)

PLM/KPG/KR



(Release ID: 2059401) Visitor Counter : 10


Read this release in: English , Urdu