அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

தூய்மையே சேவை, சிறப்பு தூய்மை இயக்கம், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கங்களில் உயிரித் தொழில்நுட்பத்துறை தீவிரப் பங்கேற்பு

Posted On: 27 SEP 2024 12:02PM by PIB Chennai

உயிரி தொழில்நுட்பத் துறை "பெரிய அளவிலான மக்கள் தூய்மை இயக்கத்தை" நடத்துகிறது. இத்துறை நடத்திய  தூய்மை இயக்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். "நமது தேசத்தை தூய்மையாக வைத்திருப்போம்" என்ற உறுதிப்பாட்டுடன், புதுதில்லி, லோதி சாலையில் சந்தைப் பகுதி உயிரி தொழில்நுட்பத் துறை ஊழியர்களால் தூய்மைப் படுத்தப்பட்டது.

உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் இதில் பங்கேற்று இந்த தூய்மை இயக்கத்தை வழிநடத்தினார்.

நாட்டைத் தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்றும் கோட்பாட்டுடன், புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதான மெட்ரோ நிலையம் அருகே உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் மற்றும் பிற அதிகாரிகள் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று"  நடும் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டனர். இந்தப் பணி அவ்வப்போது உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உயிரி தொழில்நுட்பத் துறையின் இணைச் செயலாளர், உயிரி தொழில்நுட்பத் துறையின் பிற பிரிவுகள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கனவே தூய்மை இயக்கங்களின் கீழ் அறிவித்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

*****

(Release ID: 2059344)
PLM/KPG/KR



(Release ID: 2059384) Visitor Counter : 6