பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்நாட்டுமயமாக்கலில் முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க ஐதராபாதில் 11 வது பொறியாளர்கள் மாநாட்டிற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இந்திய தேசிய பொறியியல் கல்விக்கழகமும் ஏற்பாடு செய்துள்ளன

प्रविष्टि तिथि: 26 SEP 2024 4:08PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய தேசிய பொறியியல் கல்விக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள  11வது பொறியாளர்கள் மாநாடு 2024, செப்டம்பர் 26 அன்று ஐதராபாதில் தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்த வருடாந்தர மாநாட்டின் நோக்கம், 'பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கான கூடுதல் உற்பத்தி',  'பாதுகாப்பு உற்பத்தி தொழில்நுட்பங்கள்' ஆகிய இரண்டு உத்திசார் முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதாகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் (டி.ஆர்.டி.எல்) நடைபெறும் இந்த நிகழ்வில், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் ஒன்றிணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்நாட்டுமயமாக்கலில் முன்னேற்றங்கள் ஆகியவை  குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டைத் தலைமை விருந்தினரும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் அனில் ககோட்கர், சிறப்பு விருந்தினரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டி.ஆர்.டி.எல் இயக்குநர் (ஐதராபாத்) திரு ஜி.ஏ. சீனிவாச மூர்த்தி, ஏவுகணைகள் மற்றும் ராணுவம் சார்ந்த அமைப்புகளின் தலைமை இயக்குநர் திரு யு. ராஜா பாபு, இந்திய தேசிய பொறியியல் கல்விக்கழகத் தலைவர் பேராசிரியர் இந்திரானி  மன்னா ஆகியோர் உரையாற்றினர்.

***

SMB/AG/DL


(रिलीज़ आईडी: 2059090) आगंतुक पटल : 77
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी