கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் 'தூய்மையே சேவை 2024' இயக்கத்தில் கனரகத் தொழில்துறை பங்கேற்பு

Posted On: 26 SEP 2024 1:40PM by PIB Chennai

கனரக தொழில்கள் அமைச்சகம்  அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) / தன்னாட்சி அமைப்புகளுடன் (ABs) தூய்மை மற்றும் சுகாதாரத்திற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன் 'தூய்மையே சேவை 2024'ல் தீவிரமாக பங்கேற்கிறது. தூய்மை, அழுக்கு மற்றும் கடினமான குப்பைகளை (கரும்புள்ளிகள்) அகற்றுவதில் கவனம் செலுத்தும் மெகா தூய்மை இயக்கங்கள், துப்புரவுத் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, கடந்த பத்தாண்டுகால சாதனைகளைக் கொண்டாடுவது மற்றும் 'தூய்மைக்கான தேசத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது ஆகியவற்றை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

'பழக்க வழக்கத் தூய்மை – கலாச்சாரத் தூய்மை என்ற பிரச்சாரத்தின் மையக்கருத்தைக் கருத்தில் கொண்டு, நாடு தழுவிய இந்த முயற்சிக்கு அடித்தளம் அமைக்கும் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் கரும்புள்ளிகள் என்று குறிப்பிடப்படும் புறக்கணிக்கப்பட்ட / சவாலான இடங்களை சுத்தமான மற்றும் ஆரோக்கியமான இடங்களாக மாற்றும் நோக்கத்துடன் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் தூய்மை இலக்கு அலகுகளாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2024 ஜூன் 5 ஆம்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  நடும் இயக்த்தை தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் நில சீரழிவை நிறுத்துவதையும் மாற்றியமைப்பதையும், வறட்சி எதிர்ப்பை உருவாக்குவதையும், பாலைவனமாதலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்துவதன் மூலம், செப்டம்பர் 2024-க்குள் 80 கோடி மரக்கன்றுளையும், மார்ச் 2025-க்குள் 140 கோடி மரக்கன்றுகளையும் நடவு செய்வதே இலக்கு.

பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்த இலக்கை அடைவதற்கான ஒரு முன்னேற்றமாக, 2024 செப்டம்பர் 21 அன்று அசாமின் போகாஜனில் உள்ள சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் குடியிருப்பு நகரியத்தில் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை  அமைச்சர்  திரு எச்.டி.குமாரசாமி தலைமையில் மரம் நடும் இயக்கம் நடைபெற்றது.

மேலும், மகாராஷ்டிர சுகாதார நிறுவனத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வேளாண் பல்கலைகளில் மரம் நடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக இதுவரை 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுள் நடப்பட்டுள்ளன.

***

MM/KPG/KV



(Release ID: 2059075) Visitor Counter : 20


Read this release in: Kannada , English , Urdu , Hindi