கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கனரக தொழில்கள் அமைச்சகம் சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் கீழ் தூய்மை குறித்த நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது

Posted On: 26 SEP 2024 1:38PM by PIB Chennai

தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் அரசின் நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைத்தல் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, கனரகத் தொழில்கள் அமைச்சகம், அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுடன் நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கத்தின்  4.0 இன் தொடர்ச்சியாக 4 வது ஆண்டில் தீவிரமாக பங்கேற்பதற்கான விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது, இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது, அதாவது ஆயத்த கட்டம் மற்றும் முதன்மை கட்டம் 2 முதல் 31 அக்டோபர் 2024 வரை.

தூய்மை குறித்த சிறப்பு இயக்கம் 3.0 இன் போது எம்.எச்.ஐ முன்னணியில் இருந்தது. சிறப்பு முகாம் 3.0 இன் போது, அமைச்சகம் 21 இலட்சம் சதுர அடி பரப்பளவை உருவாக்கி, தேவையற்ற பொருட்களை விற்பனை செய்து ரூ.4.66 கோடி வருவாய் ஈட்டி 2 வது இடத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டில் 1.91 இலட்சம் சதுர அடி இடம் கண்டறியப்பட்டு, சுமார் 28,000 கோப்புகள் மறு ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5,700 கோப்புகள் களையெடுக்கப்பட உள்ளன. இதேபோல், 1.05 லட்சம் (தோராயமாக) டிஜிட்டல் கோப்புகள் மதிப்பாய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 86,000 (தோராயமாக) முடித்து வைக்கப்பட உள்ளது.

*****

PKV/RS/KV



(Release ID: 2058996) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi , Kannada