தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளுடன் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆலோசனை
Posted On:
25 SEP 2024 6:05PM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், அதன் அனைத்து மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்களுடனும் 2024, செப்டம்பர், 25 அன்று, அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் திட்டம் குறித்து, நாடு தழுவிய ஆலோசனையை நடத்தியது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்காக, பல்வேறு பங்குதாரர் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள வேலை வழங்குவோருடன் விரிவான ஆலோசனைகளை நடத்துமாறு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின், மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்களுக்கு இணங்க, கள அலுவலகங்கள் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் (வேலை வழங்குவோர்) சங்கங்கள், தொழில்துறையின் பல்வேறு அமைப்புகள் மற்றும் இளைஞர் சங்கங்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தின. இந்த கலந்துரையாடல்களின் மூலம் கள அலுவலகங்கள் முக்கியமான பின்னூட்டங்களையும் ஆலோசனைகளையும் சேகரித்ததோடு அவர்களின் கேள்விகளையும் குறிப்பெடுத்தன.
கூட்டத்திற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் அமைச்சகம், இபிஎஃப்ஓ மற்றும் அனைத்து கள அலுவலகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது அமைச்சக அதிகாரிகளால் கள அலுவலகங்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்ட திட்டத்தின் சில விதிகளை மையமாகக் கொண்ட கேள்விகள் முக்கிய இடம் பெற்றன. திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும், பல்வேறு பங்குதாரர்கள் எழுப்பிய கேள்விகளை மனதிற்கொண்டு இறுதி திட்ட வரைவில் முறையாக தெளிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கள அலுவலர்கள் திட்டத்தின் பல்வேறு விதிகளை முழுமையாகப் புரிந்துகொள்வதன் அவசியத்தை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் வலியுறுத்தினார். மேலும் திட்டத்திற்கு தேவையான உந்துதலைக் கொடுக்க முதலாளிகள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன் வழக்கமான தொடர்புகளை நடத்த வேண்டும். இபிஎஃப்ஓ அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நேர்த்தியாக செயல்படுத்த வேண்டும் என்றும், திட்டத்திற்கு தேவையான உத்வேகத்தை வழங்க, திட்டத்தை ஆதரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
*****
MM/KPG/DL
(Release ID: 2058750)