அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மூலம் சமூகத்திற்கு ஒத்துழைக்கவும் சேவை செய்யவும் குருகிராம் பல்கலைக்கழகத்துடன் சி.எஸ்.ஐ.ஆர் - என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
25 SEP 2024 5:09PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் - தேசிய அறிவியல் தொலைதொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (NIScPR), குருகிராம் பல்கலைக்கழகத்துடன் 2024, செப்டம்பர் 24 அன்று புதுதில்லியில் உள்ள பூசா வளாகத்தில் உள்ள என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்-ன் அறிவியல் தகவல் தொடர்பு மையத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சமூகத்தின் சேவையில் இரு நிறுவனங்களுக்கும் புதிய சாளரங்களை திறக்கும். அறிவியல் தகவல் தொடர்பு, எஸ்.டி.ஐ கொள்கை ஆராய்ச்சி, பாரம்பரிய அறிவு உள்ளிட்ட அம்சங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது, சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குநர் மற்றும் குருகிராம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ராஜேஷ் குமார் சிங் ரௌஷன், நிர்வாகக் கட்டுப்பாட்டாளர், சிஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர் மற்றும் குருகிராம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ராஜீவ் குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். டாக்டர் சரளா பாலச்சந்திரன், தலைவர், வேதியியல் துறை டாக்டர் திவிவேதி, தலைவர், நர்சிங் மற்றும் குருகிராம் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வுகள் பிரிவுத் தலைவர் டாக்டர் ராகேஷ் யோகியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சி.எஸ்.ஐ.ஆர் - என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் கொள்கை ஆராய்ச்சியில் 70 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 2024 நவம்பர் 13 - 14 அன்று, குருகிராம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சி.எஸ்.ஐ.ஆர் - என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் பாரம்பரிய அறிவின் தொடர்பு மற்றும் பரவல் (CDTK-2024) குறித்த சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. CDTK-2024-க்கான முன்பதிவுக்கான கடைசி தேதி 2024 செப்டம்பர் 30 ஆகும்.
*****
MM/KPG/DL
(Release ID: 2058712)
Visitor Counter : 44