புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இந்தியாவில் ஊதிய அறிக்கை: ஒரு வேலைவாய்ப்பு முன்னோக்கு - ஜூலை, 2024" வெளியீடு

Posted On: 25 SEP 2024 4:55PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி, முறைசார் துறையில் செப்டம்பர் 2017 முதல், வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

முழு அறிக்கையைக் காண  இந்தியாவில் ஊதிய அறிக்கை-ஒரு வேலைவாய்ப்பு முன்னோக்கு - ஜூலை, 2024 240924-1.pdf (mospi.gov.in)

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம்:

2024 ஜூலை மாதத்தில்புதிய இபிஎஃப் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை10,52,143 ஆகும், இது ஜூன் 2024 மாதத்தில் 10,56,867 ஆக இருந்தது.

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம்:

2024 ஜூலை மாதத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட மற்றும் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் செலுத்தும் பங்களிப்பு 16,61,836 ஆகும், இது ஜூன் மாதத்தில் 16,33,848 ஆக இருந்தது.

2.3 தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS):

ஜூலை 2024 மாதத்தில் NPS இன் கீழ் மொத்த பங்களிப்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை62,880 ஆகும், இது ஜூன் 2024 மாதத்தில் 64,799 ஆக இருந்தது.

*****

MM/KPG/DL


(Release ID: 2058707) Visitor Counter : 37


Read this release in: Hindi , Urdu , Bengali , English