அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விண்வெளி தொழில்நுட்பத் துறை பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து விண்வெளியில் பெண்கள் தலைமைத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தியது
Posted On:
25 SEP 2024 1:29PM by PIB Chennai
இங்கிலாந்து-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சியின் (UKIERI) ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையால் விண்வெளியில் பெண்கள் தலைமைத்துவத் திட்டம் (WiSLP) செப்டம்பர் 24, 2024 அன்று தொடங்கப்பட்டது.
நீடித்த தலைமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், விண்வெளி அறிவியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்காக, பாலின உள்ளடக்கிய நடைமுறைகளை வலுப்படுத்துவதில், நிறுவனங்களை ஆதரிப்பதில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது. கோவென்ட்ரி பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் விநியோக பங்குதாரராக உள்ளது.
"இந்த திட்டம் விண்வெளி அறிவியலில் பாலின உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஒரு வலுவான தலைமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும்" என்று அறிவியல் மற்றும் பொறியியலில் பெண்கள் (வைஸ்) பிரிவின் தலைவர் டாக்டர் வந்தனா சிங் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவின் துணை இயக்குநர் மைக்கேல் ஹவுல்கேட், உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் STEM துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அழைப்பு விடுத்தார்.
இங்கிலாந்தின் கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எலினா கௌரா பேசுகையில், கலாச்சாரத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதைவிட, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பெண்களைத் தேடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த திட்டம் 250 ஆரம்பகால தொழில் ஆராய்ச்சியாளர்களின் தலைமைத்துவ திறனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலின சார்புகளை வழிநடத்துவதற்கும், நிலையான ஆதரவு வலையமைப்பை உருவாக்குவதற்கும், கருவிகளுடன் அவர்களைச் சித்தப்படுத்துகிறது.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) இயக்குனர் பேராசிரியர் அன்னபூரணி சுப்பிரமணியம் பேசுகையில், பொறியியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்து வரும் விண்வெளி அறிவியல் துறையில் ஆரம்பத்தில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவித்தார்.
கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட பயிலரங்கு பங்கேற்பாளர்கள், விண்வெளி அறிவியலில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான, தேசிய மற்றும் உலகளாவிய சூழல்கள் குறித்து விவாதித்தனர்.
வானியற்பியல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியமான துறைகளில், பாலின முன்னோக்கை ஒருங்கிணைப்பதன் மூலம், நிலையான வழிகாட்டல் நெட்வொர்க்குகளை உருவாக்குதல், அறிவியல் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
***
(Release ID: 2058528)
MM/KPG/KR
(Release ID: 2058598)
Visitor Counter : 54