தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆசியாவின் 3-வது சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்தது இந்தியா: ஆசிய குறியீட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது
Posted On:
25 SEP 2024 10:33AM by PIB Chennai
ஒரு பெரிய மாற்றமாக, இந்தியா ஜப்பானை விஞ்சி ஆசியாவின் செல்வாக்கு மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் குறியீட்டில் மூன்றாவது பெரிய சக்தியாக மாறியுள்ளது, இது அதன் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது. இந்த சாதனை இந்தியாவின் ஆற்றல்மிக்க வளர்ச்சி, இளைஞர்களின் சக்தி, விரிவடைந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது, இந்தப் பகுதியில் இந்தியாவை ஒரு முன்னணி சக்தியாக உயர்த்தியுள்ளது.
2024 ஆசிய செல்வாக்கு குறியீட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பிராந்திய தரவரிசையில் இந்தியாவின் நிலையான உயர்வு ஆகும்.
இந்தியாவின் எழுச்சிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள்:
1. பொருளாதார வளர்ச்சி: இந்தியா கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை அடைந்துள்ளது. அதன் பொருளாதார திறனில் 4.2 புள்ளிகள் உயர்வுக்கு பங்களித்துள்ளது.
2. எதிர்கால வாய்ப்புகள்: இந்தியாவின் எதிர்கால வளங்கள் மதிப்பெண் 8.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது, இது அதன் மக்கள்தொகை சக்தியின் நேர்மறையான தாக்கத்தைக் குறிக்கிறது. இந்தியா வரவிருக்கும் தசாப்தங்களில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிலாளர் சக்தி விரிவாக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்.
3. வெளிநாடுகளிடையே செல்வாக்கு: பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு சர்வதேச அளவில் அதிக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அணிசேரா உத்திசார்ந்த நிலைப்பாடு புதுதில்லியை சிக்கலான சர்வதேச தளத்தில் திறம்பட செயல்பட அனுமதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் சர்வதேச பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது,
ஆசியாவில் இந்தியாவின் பங்கு
2024 ஆசிய வளர்ச்சி சக்தி குறியீடு இந்தியாவை ஆசியாவில் முக்கிய சக்தியாகக் காட்டுகிறது. நாட்டின் கணிசமான வள அடித்தளம் எதிர்கால வளர்ச்சிக்கான மகத்தான ஆற்றலை வழங்குகிறது. இந்தியாவுக்கான பார்வை நம்பிக்கையுடன் உள்ளது. தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழிலாளர் சக்தியுடன், இந்தியா வரும் ஆண்டுகளில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தும்.
ஆசியா பவர் இன்டெக்ஸ்
2018 ஆம் ஆண்டில் லோவி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஆசிய வளர்ச்சி சக்தி குறியீடு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி இயக்கவியலின் வருடாந்திர அளவீடாகும். இது ஆசிய-பசிபிக் பகுதி முழுவதும் உள்ள 27 நாடுகளை மதிப்பீடு செய்கிறது, இந்த குறியீடு அரசுகளின் பொருளாயத திறன்கள் மற்றும் சர்வதேச அரங்கில் அவை செலுத்தும் செல்வாக்கு ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153194&ModuleId=3®=3&lang=1
***
(Release ID: 2058446)
PLM/RR/KR
(Release ID: 2058489)
Visitor Counter : 110
Read this release in:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam