மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பி.டெக், எம்.டெக் & பிஹெச்டி ஆய்வு மாணவர்களுக்கான இந்திய செயற்கை நுண்ணறிவு ஆய்வு உதவித்தொகை

Posted On: 24 SEP 2024 5:36PM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவு – தன்னாட்சி வர்த்தகப் பிரிவு ஆய்வு உதவித் தொகைக்காக பி.டெக். எம்.டெக் மாணவர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதே போல், செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி செய்யும் புதிய பிஹெச்டி சேர்க்கைகளுக்கான இந்திய செயற்கை நுண்ணறிவு  ஆய்வு உதவித் தொகையில் தங்கள் ஒப்புதலைப் பகிர்ந்து கொள்ள, முதல் 50 தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களையும் இந்திய செயற்கை நுண்ணறிவு  வரவேற்கிறது.

பி.டெக் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு மற்றும் எம்.டெக் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் திட்டத்தின் காலத்தை உள்ளடக்கி ஆய்வு உதவித் தொகை வழங்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை httpsindiaai.gov.inarticleproforma-for-submission-of-nominations-for-indiaai-fellowship-under-the-indiaai-mission மூலம் 2024 செப்டம்பர் 30-க்குள்  சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058277

----

IR/KPG/DL



(Release ID: 2058360) Visitor Counter : 19