பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் கடல் பயணம் II குறித்த முன்னோட்ட நிகழ்ச்சி

Posted On: 23 SEP 2024 5:41PM by PIB Chennai

நாவிகா சாகர் பரிக்கிரமா என்ற பெண்களின் கடல்  பயணத்தின் இரண்டாவது பதிப்புடன் உலகைச் சுற்றி வரும் அசாதாரண பணியை இந்திய கடற்படை தொடங்க உள்ளது. கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் தலைமையில் செப்டம்பர் 23, 2024 அன்று புதுதில்லியில் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியக் கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் கே தில்னா, லெப்டினன்ட் கமாண்டர் ஏ ரூபா ஆகிய இரண்டு துணிச்சல்மிக்க பெண் அதிகாரிகளுடன் இந்தியக் கடற்படையின் பாய்மரக் கப்பலான தாரிணி, அக்டோபர் 02 , 2024 அன்று இந்த சவாலான பயணத்தைத் துவக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணம் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ் மண்டோவியில் உள்ள கடற்படை பெருங்கடல் பாய்மரப் பயண முனையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும். இரண்டு பெண் அதிகாரிகளும் எட்டு மாத காலப்பகுதியில், 21,600 கடல் மைல்கள் (தோராயமாக 40,000 கி.மீ) எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல், காற்றாலை சக்தியை மட்டுமே நம்பியிருப்பர்கள். இந்த சுற்றுப்பயணம் அதிகாரிகளின் அசாதாரண வீரம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை எடுத்துக்காட்டுகிறது,

2017-ஆம் ஆண்டில் ஆறு அதிகாரிகள் கொண்ட அனைத்து பெண் குழுவினரால் உலகைச் சுற்றி வந்த முதல் இந்திய கடற்பயணமான நாவிகா சாகர் பரிக்கிரமாவைத் தொடர்ந்து  இந்த பயணம் இந்திய கடற்படையால் திட்டமிடப்பட்டது. இந்தப் பயணத்தின் இரண்டாவது பதிப்பு ஒரு விதிவிலக்கான ஒன்றாக இருக்கும், ஏனெனில் அவர்கள் இரட்டை கை பயன்முறையில் இதுபோன்ற சாதனையை இந்தியாவில் முதன்முறையாக நிகழ்த்துவார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், நாவிகா சாகர் பரிக்கிரமா 2, அதிகாரமளித்தல், புதுமை மற்றும் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பயணம் என்றும், பிரகாசமான மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட எதிர்காலத்திற்கான புதிய பாதைகளை வகுக்கிறது என்றும் விவரித்தார். நமது கடலோரங்களில் மட்டுமின்றி, உலகின் பரந்து விரிந்த பெருங்கடல்கள் அனைத்திலும், தொழில்முறை மற்றும் பொறுப்புகளின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான இந்திய கடற்படையின் உறுதிமொழியை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057941

***

BR/RR



(Release ID: 2058153) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi