சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காது கேளாதோரின் நலனை நோக்கமாகக் கொண்ட பல புதிய முயற்சிகள்: சைகை மொழி தினத்தில் மத்திய இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா தொடங்கி வைத்தார்

Posted On: 23 SEP 2024 6:03PM by PIB Chennai

புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் உள்ள பீம் ஹாலில் இன்று நடைபெற்ற சைகை மொழி தினம் -2024 கொண்டாட்டங்களுக்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா தலைமை வகித்தார். இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் 'சைகை மொழியினரின் உரிமைகளை ஆதரியுங்கள் என்பதாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையுடன் (DEPwD), இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) இணைந்து சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, திரு பி.எல்.வர்மா காது கேளாதோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல புதிய முயற்சிகளைத் தொடங்கினார்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

அறிவியல், சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான இந்திய சைகை மொழியில் 100 அடிப்படை கருத்து வீடியோக்கள் தொடங்கப்பட்டன.

ஐஎஸ்எல் அகராதியில் 2,500 புதிய சைகை சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய திரு பி.எல்.வர்மா தமது உரையில், சைகை மொழி என்பது காது கேளாதோருக்கான மொழி மட்டுமல்ல எனவும், அனைவருக்குமான மொழியாக மாற வேண்டும் என்றும் கூறினார். காது கேளாதரின் முன்னேற்றத்திற்காக சைகை மொழியை பரவலாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை பாராட்டிய அமைச்சர், சரியான தளம் இருந்தால், அவர்கள் வெற்றி பெற முடியும் என்று குறிப்பிட்டார். பாரீஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 29 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று எடுத்துரைத்தார்.

காது கேளாத குழந்தைகளை பிரதான நீரோட்டத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்க பெற்றோர்களும், சமூகமும் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் வலியுறுத்தினார். காது கேளாத குழந்தைகள் தன்னம்பிக்கை பெற உதவுவதில் தொழில்நுட்பமும், ஆங்கிலக் கல்வியும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், காது கேளாதோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள்,     பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057961

---------

PLM/RS/DL



(Release ID: 2057998) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi