நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அரசின் 100 நாள் செயல் திட்டம்: நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகளில் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முக்கிய கவனம் செலுத்தியது
Posted On:
23 SEP 2024 5:35PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான 'நுகர்வோர் அக்கறை மீது மத்திய அரசின் முதல் 100 நாட்களில் கவனம் செலுத்தி வருகிறது.
நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துதல், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு, நாடு முழுவதும் உணவு விநியோக முறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிறுவன நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று இத்துறையின் செயலாளர் திருமதி நிதி காரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் பின்வரும் முக்கிய சாதனைகளை சுருக்கமாக அவர் எடுத்துதுரைத்தார்:
1. விலை கண்காணிப்பு அமைப்பின் (PMS) செயலி விரிவாக்கம்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நுகர்வோர் விவகாரங்கள், உணவுத் துறையின் கீழ் உள்ள விலை அறிக்கை மையங்களில் தெரிவிக்கப்படும் தினசரி சில்லறை மற்றும் மொத்த விலைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தினசரி சில்லறை மற்றும் மொத்த விலையை நுகர்வோர் விவகாரங்கள் துறை கண்காணிக்கிறது.
2. வெங்காய கொள்முதல்: விலை நிலைப்படுத்தல் நிதி (PSF) இடையகத்திற்காக என்சிசிஎஃப் மற்றும் நேஃபட் ஆல் 4.70 லட்சம் மெட்ரிக் டன் ரபி -2024 வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நாடு முழுவதும் உள்ள முக்கிய நுகர்வு மையங்களில் வெங்காயம் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மொத்தமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057940
*****
PLM/RS/DL
(Release ID: 2057993)
Visitor Counter : 38