ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறை அமைச்சகம் நாடு தழுவிய நடவடிக்கைகளுடன் தூய்மையே சேவை இயக்கத்தில் ஈடுபட்டுள்ளது
Posted On:
23 SEP 2024 12:35PM by PIB Chennai
தூய்மையே சேவை 2024 இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜவுளி அமைச்சகம் அதன் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அதனுடன் இணைந்த அமைப்புகளில் தொடர்ச்சியான தூய்மை, கழிவு மேலாண்மை முயற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
தூய்மையான, பசுமையான இந்தியா குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அமைச்சகத்தின் முயற்சிகள் தூய்மை, நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 'கழிவிலிருந்து செல்வம்' என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தும் வகையில் ஊழியர்கள், மாணவர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
என்ஐஎஃப்டி வளாகங்களில் கழிவிலிருந்து செல்வம் பெறும் முயற்சிகள்:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) வளாகங்கள் முழுவதும், மாணவர்கள் 'கழிவிலிருந்து செல்வம்' என்ற நடவடிக்கைகளில் பங்கேற்று வருகின்றனர். துணி, காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றின் கழிவுகளை பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றனர்.
பதிவுகளின் டிஜிட்டல் மாற்றம்:
ஜவுளிக் குழு, அதன் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய அலுவலகங்களில், பதிவுகளின் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம் தூய்மையே சேவை இயக்கதிற்கு பங்களிக்கிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 100 கோப்புகள் மற்றும் 50 சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன, இது டிஜிட்டல் இந்தியா, காகித கழிவுகளைக் குறைப்பதற்கான இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப அமைந்துள்ளது.
இந்திய பருத்திக் கழகத்தில் தூய்மை இயக்கங்கள்:
இந்திய பருத்திக் கழகமும் (சிசிஐ) இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளது. தலைமையகம், கிளை அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 2024 செப்டம்பர் 20 அன்று தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர். அனைத்து அலுவலகங்களிலும் பதிவு அறைகளை சுத்தம் செய்து ஒழுங்கமைக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன,
வாசகங்கள் எழுதுதல் -ஓவியம் வரைதல் போட்டிகள்:
சமூகத்தை இந்த இயக்கத்தில் ஈடுபடுத்துவதற்காக, ஜவுளித்துறை அமைச்சகம் அதன் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் வாசகங்கள் எழுதுதல், மேற்கோள் எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தியது. இந்த நடவடிக்கைகள் பங்கேற்பாளர்களை கலை, படைப்பாற்றல் மூலம் தூய்மை குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஊக்குவித்தன.
ஜவுளித்துறை அமைச்சக தலைமையகத்தில் தூய்மை இயக்கம்:
ஜவுளித்துறை அமைச்சக தலைமையகத்தில் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. மூத்த அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று தூய்மையை உறுதி செய்தனர். அனைத்து ஊழியர்களுக்கும் தூய்மையான, ஆரோக்கியமான பணிச் சூழலை ஊக்குவிப்பதன் மூலம் பணியிடத்தில் தூய்மைக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057770
***
PLM/RS/KR
(Release ID: 2057827)
Visitor Counter : 64