தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கருவித்தொகுப்புகள் விநியோகம்: குஜராத்தின் மகேசனா மாவட்டத்தில் முன்னோடியாக திகழ்கிறது அஞ்சல்துறை 

Posted On: 20 SEP 2024 3:56PM by PIB Chennai

கடிதங்கள், பார்சல்களை வழங்குவதைத் தவிர, அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்ற வழங்குவதில் அஞ்சல் துறை இப்போது முக்கியப் பங்கு வகிக்கிறது. அஞ்சல் துறை நாட்டின் கடைசி நிலை வரை பயணிப்பதுடன், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. 
வடக்கு குஜராத் பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு  கிருஷ்ண குமார் யாதவ், 2024 செப்டம்பர் 20 அன்று மகேசனா தலைமை தபால் நிலையத்திற்கு சென்று தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  நடும் இயக்கத்தின் கீழ், மரக்கன்றை நட்டார். 
அப்போது பேசிய அவர், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் அஞ்சல் துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். இந்த திட்டத்தின் கீழ், தபால் துறை மூலம் கைவினைஞர்களுக்கும், பயனாளிகளுக்கும் உபகரணப்பெட்டிகள் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். வடக்கு குஜராத் பிராந்தியத்தின் மகேசனா அஞ்சல் பிரிவில் உள்ள ஜெகநாத்புரா கிராமத்தில் வசிக்கும் திரு ரமேஷ்பாய் பாபுபாய் சென்மாவுக்கு நாட்டின் முதல் டூல்கிட்டை அஞ்சல் துறை விநியோகித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மகேசனா பிரிவில் அஞ்சல் சேவைகளின் முன்னேற்றம் குறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு கிருஷ்ண குமார் யாதவ் விரிவான ஆய்வு நடத்தினார். தற்போது, மஹாசேன பிரிவில் மொத்தம் 6.77 லட்சம் சேமிப்புக் கணக்குகள், 79,000 அஞ்சலக வங்கிக் கணக்குகள், 66,000 சுகன்யா சம்ரிதி கணக்குகள் மற்றும் 4,000 மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 
மகேசனா தலைமை தபால் நிலையத்திற்குச் சென்ற  திரு கிருஷ்ண குமார் யாதவ், வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057015

************ 


PLM/RS/KR


(Release ID: 2057098) Visitor Counter : 44


Read this release in: English , Urdu , Hindi , Gujarati