பாதுகாப்பு அமைச்சகம்
என்சிஇஆர்டி ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் 'தேசிய போர் நினைவுச்சின்னம்' குறித்த கவிதை மற்றும் 'வீரர் அப்துல் ஹமீத்' பற்றிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது
Posted On:
19 SEP 2024 5:57PM by PIB Chennai
தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றின் பார்வைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட 'தேசிய போர் நினைவுச்சின்னம்' என்ற கவிதை மற்றும் 'வீரர் அப்துல் ஹமீத் - என்ற அத்தியாயம் ஆகியவை இந்த ஆண்டு முதல் என்சிஇஆர்டி ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த முயற்சியின் நோக்கம், தேசப்பற்று, கடமைக்கான அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகிய அம்சங்களை பள்ளி மாணவர்களிடையே கற்பித்தல் மற்றும் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கேற்பு என்பனவாகும்.
"தேசிய போர் நினைவுச்சின்னம்" என்ற கவிதை அதன் பின்னணியில் உள்ள உணர்வைப் பாராட்டுவதாகும். 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நாட்டிற்காக போராடி மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான சி.கியூ.எம்.எச் அப்துல் ஹமீத்தை கௌரவிக்கும் வகையில் 'வீர் அப்துல் ஹமீத்' என்ற அத்தியாயம் நாட்டின் மிக உயர்ந்த வீரதீர விருதான பரம் வீர் சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடி 2019 பிப்ரவரி 25 அன்று புதுதில்லியின் இந்தியா கேட்டில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குடிமகனிடமும் உயர்ந்த தார்மீக மதிப்புகள், தியாகம், தேசிய உணர்வு ஆகியவற்றின் உணர்வை வளர்ப்பதற்கும், நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்துவதற்கும் தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2056743
***
IR/RS/KR
(Release ID: 2056902)
Visitor Counter : 42