வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அதிகரித்து வரும் சரக்கு போக்குவரத்துக் கட்டணம், கப்பல் தாமதம், சரக்குப் பெட்டகங்கள் பற்றாக்குறை, துறைமுகங்களில் நெரிசல் ஆகியவற்றுக்கு தீர்வு காண அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் திரு பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது
Posted On:
19 SEP 2024 5:35PM by PIB Chennai
அதிகரித்து வரும் சரக்கு கட்டணம், கப்பல் தாமதங்கள், சரக்கு பெட்டகங்கள் பற்றாக்குறை, துறைமுகங்களில் நெரிசல் ஆகியவற்றை எதிர்கொள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு கோயல், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், கப்பல் கட்டணங்களை கணிசமாகக் குறைக்கும், பெட்டகங்கள் கிடைப்பதை மேம்படுத்தும், காலிப்பெட்டகங்கள் பிரச்சனையைத் தீர்க்கும், ஏற்றுமதி சரக்குகளை விரைவாக வெளியேற்றும் மற்றும் துறைமுகங்களில் நெரிசலைக் குறைக்கும் என்று கூறினார்.
ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் தளத்தில் 90 நாட்களுக்கு காலிப் பெட்டகங்களை இலவசமாக வைக்க அனுமதிக்க இந்தியப் பெட்டக கழகம் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்தார். மேலும் ஏற்றுதல் மற்றும் கையாளுதல் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 90 நாட்களுக்கு மேல் விதிக்கப்பட்டு வந்த ரூ.3,000 கட்டணம் தற்போது ரூ.1500-ஆக குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு சதீஷ் குமார் அறிவித்தார். மேலும், 40 அடி பெட்டகத்திற்கான இருப்பு மற்றும் கையாளுதல் கட்டணம் ரூ.9000 லிருந்து ரூ.2000 ஆகவும், 20 அடி கொள்கலனுக்கு ரூ.6000 லிருந்து ரூ.1000 ஆகவும் குறைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056726
----------------
IR/RS/KR
(Release ID: 2056898)
Visitor Counter : 37