வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் செப்டம்பர் 20-21 தேதிகளில் லாவோ குடியரசின் வியன்டியான் பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
20 SEP 2024 10:39AM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் செப்டம்பர் 20-21 தேதிகளில் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் (லாவோஸ்) வியன்டியான் நகருக்கு 21வது ஆசியான்-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 12 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார். 2024 ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைவரான லாவோஸ் இந்த ஆண்டு ஆசியான் கூட்டங்களை நடத்துகிறது.
இதில் 10 ஆசியான் நாடுகளின் பொருளாதார அமைச்சர்களும், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 8 இதர பங்குதாரர் நாடுகளும் பங்கேற்கின்றன.
இந்த ஏஇஎம்-இந்தியா கூட்டத்தில், ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பார்கள். கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு அமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா உள்ளது. அடுத்த ஆண்டு தனது 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இரண்டு நிறுவன கூட்டங்களின் ஒரு பகுதியாக பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த சக அமைச்சர்களுடன் கோயல் பல இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். மாநாட்டை நடத்தும் நாட்டின் லாவோஸ் அமைச்சர் மற்றும் கொரியா, மலேசியா, சுவிட்சர்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் சந்திப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியான் பொதுச் செயலாளர் மற்றும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான எரியா அமைப்பின் தலைவரையும் அமைச்சர் சந்திக்க உள்ளார். லாவோசில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் அமைச்சர் கலந்துரையாடுவார். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள தொழில்துறை தூதுக்குழுவையும் அமைச்சர் சந்திக்கிறார்.
இந்தியா 1992-ல் ஆசியானில் இணைந்தது. 2022-ல் அதன் விரிவான உத்திசார் கூட்டாளராக மாறியது. 2014-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் இதயமாக ஆசியான் உள்ளது. ஆசியான் இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசியான் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது.
***
(Release ID: 2056870)
PKV/RR/KR
(Release ID: 2056881)
Visitor Counter : 53