நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

செலவினங்கள் துறை மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகள் தூய்மையை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு தீர்வு காணவும் சிறப்பு முகாம் 4.0-ல் பங்கேற்க உள்ளது

Posted On: 19 SEP 2024 4:44PM by PIB Chennai

தூய்மையை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு தீர்வு காணவும், சிறப்பு இயக்கம் 4.0-ஐ செயல்படுத்த நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை தயாராக உள்ளது. இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். அதாவது ஆயத்த கட்டம் 2024 செப்டம்பர் 16 முதல் 30 வரையும் செயல்படுத்தல் கட்டம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரையும் நடைபெறும்.

2023, நவம்பர் முதல் 2024, ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், செலவினத்துறை தொடர்பாக பின்வரும் வகைகளில் குறிப்புக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்  குறிப்புகள் 91, அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்பு (அமைச்சரவை குறிப்பு) 261, மாநில அரசு குறிப்புகள் 1,289, பொதுமக்கள் குறைதீர்ப்பு 2,079, பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல் முறையீடு  200, 18,678 சதுர அடி பகுதி தூய்மையாக்கப்பட்டது, ரூ.60,38,694/- வருவாய் கழிவுகளை அகற்றியதன் மூலம் கிடைத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056677

------------

IR/RS/KR



(Release ID: 2056866) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi