சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் இருவார தூய்மைப் பணியைத் தொடங்கியது
प्रविष्टि तिथि:
19 SEP 2024 2:12PM by PIB Chennai
நாடு தழுவிய தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை 2024, செப்டம்பர் 17 அன்று இருவார தூய்மைப் பணியைத் தொடங்கியது.
தூய்மையை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வை வளர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இருவார முன்முயற்சியை, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் தூய்மை உறுதிமொழி செய்து வைத்து தொடங்கி வைத்தார். நீடித்த தூய்மை முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தி, துறையின் கீழ் உள்ள பல தேசிய நிறுவனங்கள் மற்றும் கூட்டு மண்டல மையங்களை இந்த இயக்கம் வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது.
அப்போது பேசிய அகர்வால், தனது "தூய்மை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல, அது நமது பகிரப்பட்ட பொறுப்பு. நாம் ஒன்றிணைந்து, நமது சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த முயற்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
தூய்மையே சேவை இயக்கத்தின் முக்கிய சிறப்பம்சங்களில், செகந்திராபாத்தில் உள்ள அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம் தீவிரமாக பங்கேற்றது, அதே நாளில் தூய்மை உறுதிமொழி விழாவும் நடைபெற்றது. ஊழியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2056588
---------------
IR/RS/KR
(रिलीज़ आईडी: 2056618)
आगंतुक पटल : 104