சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை 02.10.2024 முதல் 31.10.2024 வரை நிலுவையில் உள்ள விவகாரங்களை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0–ல் பங்கேற்க தயாராக உள்ளது
Posted On:
19 SEP 2024 12:38PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வழிகாட்டுதல்களின் படி, 2024, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களை குறைப்பதற்கும், தூய்மையை மேற்கொள்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ஐ கடைபிடிக்க உள்ளது.
2023, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 3.0-ல் 11407 நேரடி கோப்புகள் / ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. கோப்புகள் உள்ளிட்டவை கழிக்கப்பட்டதன் மூலம் சுமார், 8,472 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது. ரூ. 5,66,517 வருவாய் கிடைத்தது.
சிறப்பு இயக்கம் 4.0 இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது – தயார் நிலை கட்டம் 2024 செப்டம்பர் 16 முதல் 30 வரையும், செயல்படுத்தல் கட்டம் 2024 முதல் அக்டோபர் 2 முதல் 31 வரையும் நடைபெறும்.
*****
(Release ID: 2056532)
IR/RS/KR
(Release ID: 2056595)
Visitor Counter : 56