தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தானியங்கி முறையில் ஒருங்கிணைந்த சரக்கு - சேவை வரி திரும்ப பெறுதல் வசதி, மின்னணு கட்டண இணக்க வசதி ஆகிய புதிய வசதிகளுடன் ஏற்றுமதி சேவைகளை விரிவுபடுத்துகிறது தபால் அலுவலக ஏற்றுமதி மையம்

Posted On: 17 SEP 2024 7:22PM by PIB Chennai

நாடு முழுவதும் வர்த்தக ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தக் கர் நிர்யத் கேந்திரா (டி.என்.கே) எனப்படும் தபால் அலுவலக ஏற்றுமதி மையங்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க மேம்பாட்டு நடவடக்கையை அறிவிப்பதில் அஞ்சல் துறை மகிழ்ச்சியடைகிறது.

நாடு முழுவதும் நிறுவப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட  அலுவலக ஏற்றுமதி மையங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி அஞ்சல் ரசீதை மின்-தாக்கல் செய்தல், சுய முன்பதிவு, மின்னணு சுங்க அனுமதி, பேக்கேஜிங், இலவச பிக்-அப், கண்காணிப்பு, நிலையை அறிந்து கொண்டு தொடர்தல், தொகுதி அடிப்படையிலான தள்ளுபடிகள், ஆதரவு- வழிகாட்டுதல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றன.

ஒரு பெரிய வளர்ச்சியாக, தக் கர் நிர்யத் கேந்திரா (DNK) இணையதளத்தின் ஒருங்கிணைப்பு, இப்போது இந்திய சுங்க மின்னணு நுழைவாயில் (ICEGATE), இந்திய சுங்க இடிஐ அமைப்பு (ICES), பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS), இந்திய ரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி தரவு செயலாக்க- கண்காணிப்பு அமைப்பு (EDPMS) ஆகியவற்றுடன் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைந்த சரக்கு - சேவை வரி திருப்பிச் செலுத்துதலை  தானியங்கி மயமாக்க சுங்க, பொது நிதி மேலாண்மை அமைப்புகளுக்கு இடையே தரவு ஓட்டத்தை நெறிப்படுத்தும். தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் தரவுகளை அனுப்புவதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் (ஆதி வங்கிகள்) மின்னணு வங்கி வசூல் சான்றிதழ்களை (e-BRC) வழங்க முடியும். ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதி பரிவர்த்தனைகள், பணம் செலுத்துதல் ஆகியவற்றில் மேம்பட்ட அனிபவத்தைப் பெறுவார்கள்

இந்த ஒருங்கிணைப்பு அஞ்சல் கட்டமைப்பு மூலம் ஏற்றுமதியை எளிதாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. குறிப்பாக தொலைதூர, சிறிய இடங்களிலிருந்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு எளிதாக வர்த்தகம் செய்வதற்கு பங்களிக்கிறது. அத்துடன் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு, புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவித்தல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்து ஊக்குவிக்கிறது.

***

PLM/AG/KR/DL


(Release ID: 2056402) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi , Telugu