இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது- மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
18 SEP 2024 6:14PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டின் இரண்டாவது பதிப்பை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சேவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் தலைமை உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா விளையாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தரமான பயிற்சியை வழங்குதல், உள்ளடக்கிய உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் கடைக்கோடி பகுதியிலிருந்து திறமைகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் எங்கள் கவனம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுள்ள தலைமையின் கீழ், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் விளையாட்டை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார். சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மேம்பட்ட திறன்கள் மூலம் ஊக்கமருந்து எதிர்ப்பில் இந்தியாவின் வலுவான பங்கை அவர் சுட்டிக் காட்டினார்.
மாநாட்டின் போது, டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரெய்லி முறையில் இந்தியாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு வழிகாட்டியை வெளியிட்டார்.
ரக்ஷா நிகில் காட்சே தனது உரையில், பின்னணி, பாலினம், வயது அல்லது திறன் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு தனிநபருக்கும் விளையாட்டில் பங்கேற்கவும் சிறந்து விளங்கவும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் ஆழமான வேரூன்றிய உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
---
IR/KPG/DL
(Release ID: 2056342)