கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்தியாவின் மின்சார வாகனப் போக்குவரத்துச் சூழலில் ஃபேம் திட்டத்தின் வெற்றி தொடர்பான விளக்க நிகழ்ச்சி - கனரக தொழில்துறை அமைச்சர் திரு குமாரசாமி பங்கேற்பு
Posted On:
18 SEP 2024 6:11PM by PIB Chennai
கனரக தொழில்துறை அமைச்சகம் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியாவின் மின்சார வாகனப் போக்குவரத்துச் சூழலில் ஃபேம் (FAME) திட்டத்தின் வெற்றி தொடர்பான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது. மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு குமாரசாமி, கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. கம்ரான் ரிஸ்வி, மூத்த அரசு அதிகாரிகள், வாகனத் தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஹெச்.டி.குமாரசாமி, 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைச்சகம் செயல்படுவதாக கூறினார். பசுமையான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, பொருளாதார ரீதியாக வளமான எதிர்காலத்தை நோக்கி நம் நாட்டை முன்னேற்றுவதில் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்தார். கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் நிலையான போக்குவரத்தை அடைவதற்கும் அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஃபேம் திட்டம் தெளிவான சான்றாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு கம்ரான் ரிஸ்வி, ஃபேம்-2 திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழில்துறைத் துறையினரைப் பாராட்டினார்.
நாட்டில் மின்சார வாகனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஃபேம் (FAME) திட்டம் தொடங்கப்பட்டது.
***
PLM/AG/DL
(Release ID: 2056336)
Visitor Counter : 48