தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்காலிக பணிகளை மேற்கொள்ளும் நொழிலாளர்களுக்கும் நடைபாதை தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்குவது தொடர்பான கூட்டம் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 18 SEP 2024 5:29PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று (18.09.2024) நடைபெற்ற தற்காலிக தொழிலாளர்கள் தொடர்பான கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். -ஷ்ரம் தளத்தில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கை கிக் எனப்படும் தற்காலிக அடிப்படையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும் நடைபாதை சாலையோர தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டப் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரிவில் உள்ள தொழிலாளர்களின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு விரிவான கண்ணோட்டத்தை உருவாக்குவதில் கூட்டம் கவனம் செலுத்தியது. தற்காலிக, சாலையோர தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புக்கான உள்ளடக்கிய கட்டமைப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெறக்கூடிய வகையில் ஒரு பிரத்யேக குழுவை அமைக்குமாறு டாக்டர் மாண்டவியா அமைச்சகத்திற்கு அறிவுறுத்தினார். இந்த குழு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து இந்த தொழிலாளர்களுக்கு வலுவான சமூக பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது குறித்து செயல்படும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் -ஷ்ரம் தளத்தில் தொழிலாளர்களை இணைப்பதற்கான இலக்கை மத்திய அமைச்சர் நிர்ணயித்தார். பல்வேறு அரசு முயற்சிகளின் கீழ் மேலும் பலன்களை வழங்குவதற்கு தொழிலாளர்களின் பதிவு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

வேலை தேடுபவர்களுக்கும் தொழில் நிறுவனத்தினருக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை வழங்கும் முதன்மை தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்.சி.எஸ்) தளம் பற்றி பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக என்சிஎஸ் தளத்தில் வேலை காலியிடங்களை பட்டியலிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அவர் கேட்டுக் கொண்டார்.

அர்பன் கம்பெனி, ஸ்விக்கி அண்ட் இன்ஸ்டாமார்ட், ஸொமேட்டோ அண்ட் பிளிங்கிட், போர்ட்டர், ஈவன் கார்கோ, அமேசான், உபெர், ஓலா, ஃபிக்கி, டெலாய்ட், சிஐஐ, இந்தியா டெக், ஓஎம்ஐ போன்ற நிறுவனத்தினர் விவாதத்தில் இணைந்து, அமைச்சகத்தின் முன்முயற்சியைப் பாராட்டினர்.

***

PLM/AG/DL



(Release ID: 2056332) Visitor Counter : 35