எஃகுத்துறை அமைச்சகம்
என்எம்டிசி நிறுவனத்திற்கு ராஜ்பாஷா கீர்த்தி விருது 2023-2024 வழங்கி கௌரவிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
18 SEP 2024 3:42PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளர் மற்றும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்எம்டிசி நிறுவனம், 2023-2024-ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க 'ராஜ்பாஷா கீர்த்தி விருது' “சி“ பிராந்தியத்தில் அமைந்துள்ள நிறுவனங்களின் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை ஏற்பாடு செய்திருந்த இந்தி தின விழா 2024 மற்றும் நான்காவது அகில இந்திய தேசிய மொழி ராஜ்பாஷா சம்மேளனத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. அலுவல் மொழிக் கொள்கையை திறம்பட செயல்படுத்தியதற்காக என்.எம்.டி.சி.க்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு சுதன்ஷு திரிவேதி முன்னிலையில், என்எம்டிசி சார்பாக தலைமைப் பொது மேலாளர் (பணியாளர் மற்றும் நிர்வாகம்) திருமதி ஜி. பிரியதர்ஷினி இந்த விருதை, உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், என்எம்டிசியின் முன்மை தலைமை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு அமிதவா முகர்ஜி கூறுகையில், இந்த அங்கீகாரம் இந்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், அலுவல் மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவதற்கும் என்எம்டிசியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. எங்கள் செயல்பாடுகளில் தேசிய மொழியை நிலைநிறுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் பெருமிதம் கொள்கிறோம் என்று கூறினார்.
என்.எம்.டி.சி தொடர்ந்து இந்தி மொழி மேம்பாட்டை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ளது மற்றும் பல ராஜ்பாஷா விருதுகளைப் பெற்றுள்ளது.
----
IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2056323)
आगंतुक पटल : 49