ஆயுஷ்
azadi ka amrit mahotsav

யோகா கல்வியில் ஒத்துழைப்பு குறித்து ஆராய தாய்லாந்து தூதுக்குழு தில்லி வருகை

Posted On: 18 SEP 2024 3:08PM by PIB Chennai

தில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்திற்கு (MDNIY- எம்டிஎன்ஐஒய்), தாய்லாந்தின் பாரம்பரிய - மாற்று மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒரு குழு நேற்று (2024 செப்டம்பர் 17) வந்தது. தாய்லாந்தின் பாரம்பரிய - மாற்று மருத்துவத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் தவீசின் விஸ்னுயோதின் தலைமையில் பிற அதிகாரிகள் தாய்லாந்து குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

இந்த தூதுக்குழுவினரை எம்டிஎன்ஐஒய் இயக்குநர் டாக்டர் காசிநாத் சமகண்டி வரவேற்றார். அவர் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வழங்கினார்தாய்லாந்து பிரதிநிதிகளிடையே உரையாற்றிய டாக்டர் காசிநாத் சமகண்டி, இந்த நிறுவனத்தின் வளமான பாரம்பரியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எம்டிஎன்ஐஒய், உடல், மன, ஆன்மீக நல்வாழ்வுக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது என அவர் தெரிவித்தார்.

பின்னர் தாய்லாந்து தூதுக்குழு ஒரு குறுகிய யோகா அமர்வில் பங்கேற்றது. யோகா கல்வி, சிகிச்சை, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் பன்முக கலாச்சார ஒத்துழைப்பை வளர்ப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டது.

***

PLM/AG/DL


(Release ID: 2056304) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi