மத்திய அமைச்சரவை
உயிரி தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சியையும் மேம்பாட்டையும் ஊக்குவிக்க 'உயிரி ரைடு' என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
18 SEP 2024 3:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (18.09.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் இரண்டு முக்கியத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, "உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development -Bio- RIDE)" என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தியின் புதிய அம்சங்களுடன் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் மூன்று பரந்த அம்சங்களைக் கொண்டுள்ளது:
அ) உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி - மேம்பாடு (R&D);
b) தொழில்துறையினர், தொழில்முனைவோர் மேம்பாடு (I&ED)
c) உயிரி உற்பத்தி, உயிரி பவுண்டரி
2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான 'பயோ-ரைடு' திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒதுக்கீடு ரூ.9197 கோடியாகும்.
பயோ-ரைடு திட்டம் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், உயிரி தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், உயிரி உற்பத்தி, உயிரி தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமைத்துவ நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஆராய்ச்சியை விரைவுபடுத்துதல், தயாரிப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல், கல்வி ஆராய்ச்சி - தொழில்துறை பயன்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தூய்மையான எரிசக்தி போன்ற தேசிய, உலகளாவிய சவால்களை சமாளிக்க உயிரி கண்டுபிடிப்புகளின் திறனைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் இயக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பயோ-ரைடு திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*உயிரி தொழில்முனைவை ஊக்குவித்தல்
*தொழில்-கல்வி ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
*நீடித்த உயிரி உற்பத்தியை ஊக்குவித்தல்
*புற நிதி மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு
*உயிரி தொழில்நுட்பத் துறையில் மனித வளத்தை வளர்த்தல்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056001
***
PLM/AG/DL
(Release ID: 2056210)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam