விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தில் அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் நிகழ்ச்சி: காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார் மத்திய இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி

Posted On: 18 SEP 2024 2:08PM by PIB Chennai

ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தில் மத்திய வேளாண் - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி காணொலிக் காட்சி மூலம் நேற்று பங்கேற்றார்.

வேளாண் - விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி கிருஷி பவனில் துறையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு தூய்மை இயக்கத்தை கண்காணித்தார். மேலும், ஆவணங்கள், கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பயன்படுத்தப்படாத அலுவலக பொருட்கள், உபகரணங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், வேளாண், விவசாயிகள் நலத்துறை செயலாளர், துறை அதிகாரிகளுக்கு தூய்மை உறுதிமொழியை அவர் ஏற்று வைத்தார்.

தூய்மையே சேவை இயக்கம் 2024 17 முதல் 2024 அக்டோபர் 1 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர் தூய்மை இந்தியா தினம், 2024 அக்டோபர் 2 -ம் தேதி கொண்டாடப்படும்.

இந்த இயக்கத்தில் வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை தீவிரமாக பங்கேற்று வருகிறது. தூய்மையே சேவை, 2024 இயக்கத்தின் போது, நாடு முழுவதும் பரவியுள்ள அனைத்து சார்நிலை, இணைப்பு, தன்னாட்சி அமைப்புகள், கள அலுவலகங்களுடன் சுமார் 600 தூய்மை தொடர்பான நடவடிக்கைகள் வேளாண் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளன.

2024 செப்டம்பர் 17 அன்று, அதாவது இயக்கத்தின் தொடக்க நாளில், வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

***

(Release ID: 2055948)

PLM/AG/RR



(Release ID: 2056005) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi , Telugu