பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு உற்பத்தித் துறை நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் தூய்மையை நிறுவனமயமாக்குகிறது
Posted On:
17 SEP 2024 12:38PM by PIB Chennai
பணியிடத்தில் தூய்மையையும் சுகாதாரத்தையும் ஊக்குவிப்பதற்கான உறுதிமொழியை முன்னெடுத்து, பாதுகாப்பு உற்பத்தித் துறை (DDP) 2023 நவம்பர் முதல் 2024 ஆகஸ்ட் வரை அதன் அனைத்து பிரிவுகள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்களில் மொத்தம் 446 தூய்மை இயக்கங்களை நடத்தியுள்ளது. இந்த இயக்கங்களின் கீழ், கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல், பயன்பாடு இல்லாத பொருட்களை அப்புறப்படுத்துதல், தூய்மை இயக்கங்கள், பொது மக்களின் குறைகள், பிற குறிப்புகள், உத்தரவாதங்கள் போன்றவற்றை விரைவாகவும் முறையாகவும் தீர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தூய்மை இயக்கம் தொடர்பாக இத்துறையின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு உற்பத்தித் துறை, புதுதில்லியில் அமைந்துள்ள தனது அலுவலகங்களிலும், அனைத்து கள அலுவலகங்கள், பிரிவுகளிலும் தூய்மை குறித்த சிறப்பு இயக்கம் 3.0 என்ற சிறப்பு இயக்கத்தை நடத்தியதன் மூலம் நாடு தழுவிய அளவில் தூய்மை இயக்கத்தை நடத்தியது. இக்காலப்பகுதியில் மொத்தம் 13,356 கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், விரிவான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களின் தீவிர முயற்சியால், மொத்தம் 8750 சதுர அடி இடம் பயன்பாட்ட்டுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் மூலம், ரூ.14,58,225/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தூய்மை நடைமுறை இத்துறையின் அன்றாட நடைமுறைகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. இதற்குக் காரணம், அலுவலகச் சூழலில் எந்த ஒரு வேலைக்கும் முன்னோடியாக தூய்மையை வழங்குவதில் துறையின் நேர்மையான முயற்சிகளே காரணமாகும்.
***
(Release ID: 2055541)
PLM/AG/KR
(Release ID: 2055913)
Visitor Counter : 34