இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

டாக்டர் மன்சுக் மாண்டவியா "உள்ளடக்கிய மாநாட்டின்" 2 வது பதிப்பில் பங்கேற்கிறார்

Posted On: 17 SEP 2024 11:05AM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே ஆகியோர், புதுதில்லியில் நாளை நடைபெறும் இரண்டாவது"உள்ளடக்கிய மாநாட்டில்" கலந்து கொள்கின்றனர்.

 

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா), "உள்ளடக்கிய மாநாட்டின்" 2வதுபதிப்பை நடத்துகிறது. இந்த மாநாடு NADA-ன் முதன்மை முயற்சியாகும், இது COP9 பணியகத்தின் 2வதுமுறையான கூட்டம் மற்றும் செப்டம்பர் 17-18, 2024 தேதிகளில் நடைபெறும் விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டின் நிதி ஒப்புதல் குழுவின் 3வதுமுறையான கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும்.

 

பன்முகத்தன்மை, அணுகல் மற்றும் விளையாட்டு வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, ஊக்கமருந்து எதிர்ப்பு முயற்சிகளில் மிகவும் உள்ளடக்கிய நிலப்பரப்பை உருவாக்குவதை மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளடக்கத்தை வளர்ப்பதன் மூலம், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட, ஊக்கமருந்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், அனைத்து பங்குதாரர்களையும் சிறப்பாக ஒருங்கிணைப்பதற்கான வழிகளை இந்த மாநாடு ஆராயும்.

 

முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் அமர்வுகளைத் தவிர, பல வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள், மாலையில் ஒரு கலாச்சார நிகழ்ச்சி இருக்கும், இது இந்தியாவில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய யோசனையைக் கொண்டாடும்.

***

 

(Release ID: 2055515)



(Release ID: 2055898) Visitor Counter : 15