சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், நாடு முழுவதும் 75 இடங்களில் 'சமூக அதிகாரமளித்தல் முகாமை' தொடங்கி வைக்கிறார்
Posted On:
16 SEP 2024 5:41PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாரிலிருந்து நாடு முழுவதும் 75 இடங்களில் 'சமூக அதிகாரமளித்தல் முகாம்' நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வாங்க / பொருத்த உதவும் திட்டத்தின் கீழ் 'மாற்றுத்திறனாளிகள் ' பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
புலந்த்ஷாரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி, நாடு முழுவதும் உள்ள இதர ஆர்வமுள்ள வட்டாரங்களில் உள்ள பிற முகாம்களுடன் இணையதளம் மூலம் இணைக்கப்படும். இதில் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட 9,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளில் இலவச உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, பொதுத்துறை நிறுவனமான இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகத்துடன் (அலிம்கோ) இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் புலந்த்ஷார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் போலா சிங், உள்ளாட்சி பிரதிநிதிகள்,மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அலிம்கோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி அலிம்கோ https://www.youtube.com/alimcohq அதிகாரப்பூர்வ யூடியூப் அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
***
MM/AG/DL
(Release ID: 2055411)
Visitor Counter : 37