பாதுகாப்பு அமைச்சகம்
மியான்மரில் யாகி புயல் பாதிப்புக்கு உதவும் இந்திய கடற்படை
प्रविष्टि तिथि:
15 SEP 2024 8:28PM by PIB Chennai
மியான்மரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க இந்திய கடற்படை மனிதாபிமான உதவிகளை விரைந்து மேற்கொள்ள தயாரிப்புப் பணிகளை தொடங்கின. தெற்கு சீன கடற்பகுதியில் உருவான யாகி புயலின் தாக்கம் மியான்மரின் பல பகுதிகளில் கடுமையாக இருந்தது.
இதையடுத்து குடிநீர், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஐஎன்எச்எஸ் கல்யாணி கப்பல் விசாகப்பட்டடினத்தில் இருந்து யாங்கூனுக்கு புறப்பட்டுச் சென்றது. குறுகிய அவகாசம் இருந்தபோதிலும் விரைவான செயல்பாடு, இந்த பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் போது கடற்படையின் பணித்திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது.
***
(ID: 2055263)
SMB/RS/KR
(रिलीज़ आईडी: 2055323)
आगंतुक पटल : 93