அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தூய்மையே சேவை, சிறப்பு இயக்கம் ஆகியவற்றுக்கு உயிரித் தொழில் நுட்பத் துறை தயாராகிறது

Posted On: 15 SEP 2024 2:59PM by PIB Chennai

உயிரி தொழில்நுட்பத் துறையில் தூய்மைக்கும் நிலுவையில் உள்ள பணிகளைத் நிறைவேற்றவும் நான்காவது கட்ட சிறப்பு இயக்கத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

உயிர் தொழில்நுட்பத் துறை, தூய்மையைப் பராமரிக்கவும், நிலுவையில் உள்ள முக்கிய குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்புகள், பதிவேடுகள் மேலாண்மை, கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல், அலுவலகம், வெளிப்புற இடங்களை அழகுபடுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, துறை, அதன் தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்களில் இந்த இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்த உயிரித் தொழில்நுட்பத் துறை தயாராகி வருகிறது.

இது தொடர்பாக அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதன் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர். தூய்மையே சேவை- 2024, சிறப்பு இயக்கம் 4.0 ஆகியவற்றை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கான திட்டமிடல் குறித்து கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த இயக்கத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள சமூக ஊடகங்களைத் தீவிரமாக பயன்படுத்த இத்துறை திட்டமிட்டுள்ளது. தூய்மையை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள பணிகளையும் குறைகளையும் விரைந்து முடிக்கவும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து, இத்துறையின் ஒருங்கிணைப்பு அலுவலராலும் உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளராலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

*****

PLM / KV

 

 



(Release ID: 2055197) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi