விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை / இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை தூய்மையை ஊக்குவித்தல் மற்றும் நிலுவைகளைக் குறைத்தல் ஆகிய சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்க உள்ளது
Posted On:
13 SEP 2024 4:27PM by PIB Chennai
தூய்மை மற்றும் அரசில் நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைப்பதை மையமாகக் கொண்டு 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை சிறப்பு இயக்கம் 4.0-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சிறப்பு இயக்கம் 3.0-ல் இது போன்ற பிரச்சாரத்தின் போது, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை / இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மாதந்தோறும் நிலுவையில் உள்ள குறிப்புகளை அகற்ற நிலையான முயற்சிகளை மேற்கொண்டது.
சிறப்பு முகாம் 3.0-ன் போது, அமைச்சகம் அதிகபட்ச பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் மேல்முறையீட்டு மனுக்களை தீர்த்து வைத்தது.
இத்துறை மின்-கோப்புகளை காகிதமில்லாமல் பயன்படுத்துகிறது, மேலும், மேற்கண்ட பிரச்சாரத்தின் போது, சிறப்பு பிரச்சாரத்தின் கீழ் பதிவு மேலாண்மை நடைமுறைகளின் ஒரு பகுதியாக நேரடி கோப்புகளை அப்புறப்படுத்துதல், மின்-கோப்புகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் மூடுதல் ஆகியவற்றிற்கான இலக்குகளை எட்டியது. ஏராளமான இடங்கள் விடுவிக்கப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டன.
வரவிருக்கும் சிறப்பு முகாம் 4.0-ல் தனது முயற்சிகளை மேம்படுத்த இத்துறை தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
*****
MM/KPG/DL
(Release ID: 2054649)
Visitor Counter : 39