சுரங்கங்கள் அமைச்சகம்
தூய்மையே சேவை 2024: தூய்மையான மற்றும் பசுமை இந்தியாவுக்கான இயக்கம்
Posted On:
13 SEP 2024 1:22PM by PIB Chennai
தூய்மை இந்தியா என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, சுரங்க அமைச்சகம் செப்டம்பர் 14, 2024 முதல் தூய்மையே சேவை பிரச்சாரம் 2024-ஐ தொடங்க உள்ளது, இது 2024, அக்டோபர் 2 அன்று முடிவடையும்.
"தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" மரம் நடும் முன்முயற்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, தூய்மை, உடற்தகுதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், அமைச்சகம் அதன் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில், தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளது. அமைச்சக அலுவலகங்கள், சுரங்கப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பாக சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் இடங்களைக் குறிவைத்து விரிவான தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுரங்கத் துறை செயலாளர் திரு வி.எல்.காந்தா ராவ் தலைமையிலான "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 2024, செப்டம்பர் 16 அன்று புதுதில்லியில் 100 கன்றுகள் நடப்படும். இது குடிமக்களையும் ஊழியர்களையும் குறிப்பிட்ட இடங்களில் மரங்களை நடவு செய்ய ஊக்குவிக்கும், சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு ஏற்ப பசுமைப் போர்வையை மேம்படுத்தும். அமைச்சகம் மற்றும் அதன் கள அலுவலகங்களின் அனைத்துப் பணியாளர்களும், தூய்மையான சுற்றுச்சூழலுக்கான தங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்த, 2024 செப்டம்பர் 17, அன்று தூய்மை உறுதிமொழியை எடுப்பார்கள்.
இந்த பிரச்சாரம், உள்ளூர் சமூகங்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் குடிமக்களை மாராத்தான்கள், நடைபயிற்சி மற்றும் சைக்ளாத்தான்கள் மூலம் ஈடுபடுத்தும், தூய்மை மற்றும் உடற்தகுதியை ஊக்குவிக்கும். தூய்மைப் பணியாளர் பாதுகாப்பு முகாம் என்று அழைக்கப்படும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சிறப்பு சுகாதார முகாம்கள், சுகாதார பரிசோதனைகளை வழங்கும், பிபிஇ கிட்களை விநியோகிப்பதுடன் சமூக நலத் திட்டங்களுக்கான இணைப்புகளை வழங்கும். தூய்மை இலக்கு அலகுகளை மாற்றுதல் முன்முயற்சியின் மூலம், புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை, தூய்மையான, நீடித்த இடங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளையும் அமைச்சகம் வழிநடத்தும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அமைச்சகத்தின் முக்கியப் பிரமுகர்கள் புவி-பாரம்பரியம் மற்றும் புவி-சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவார்கள், இந்த இடங்களில் தூய்மை மற்றும் பொறுப்பான சுற்றுலாவை ஊக்குவிப்பார்கள். சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகள், கட்டுரை எழுதுதல் மற்றும் தூய்மை இயக்கத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் பள்ளி நடவடிக்கைகள் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகள் இந்த பிரச்சாரத்தில் இடம்பெறும். அக்டோபர் 2, 2024 அன்று, பிரச்சாரம் முழுவதும் தூய்மைக்கு முக்கியப் பங்களிப்புகளுக்காக, துப்புரவுத் தொழிலாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
தூய்மையே சேவை 2024-ன் போது, சிறப்பு முயற்சிகளில் மீட்டெடுக்கப்பட்ட சுரங்கப் பகுதிகளை அழகுபடுத்துவது அடங்கும், அங்கு ஆறு தளங்கள் பசுமை வளையங்களை உருவாக்க, விரிவான மரம் நடும் இயக்கங்களுக்கு உட்படுத்தப்படும். கனிமம் வெட்டி எடுக்கப்பட்ட தளங்கள் பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பழத்தோட்டங்களாக மாற்றப்பட்டு, நிலைத்தன்மை மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும். பயன்படுத்தப்படாத பாறை மாதிரிகள் மற்றும் அலுமினியக் கழிவு ஆகியவை, சிற்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க, மறுபயன்பாடு செய்யப்படும், இது சிறந்த கழிவு முன்முயற்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்படும்.
தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான இந்த இயக்கத்தில், குடிமக்கள் தீவிரமாக பங்கேற்க சுரங்க அமைச்சகம் அழைப்பு விடுக்கிறது. "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" முன்முயற்சி, பரந்த தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
****
MM/KPG/KR/DL
(Release ID: 2054619)
Visitor Counter : 76