சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அக்டோபர் 2 முதல் 31 வரை நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் தூய்மை குறித்த சிறப்பு முகாம் 4.0-க்கு ஏற்பாடு

Posted On: 13 SEP 2024 12:03PM by PIB Chennai

முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் தூய்மைக்கான சிறப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் (RT&H) மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து தூய்மைப் பிரச்சாரத்திற்கான தயாரிப்பை ஆய்வு செய்து, 2024 அக்டோபர் 2 முதல் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 2024 குறித்து சிறப்புக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவலகம், மாநில அரசுகள் ஆகியோரின் குறிப்புகளுக்கு பதில் அளித்தல், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் மேல்முறையீடுகள், விதிகள்  நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், பதிவேடுகள் மேலாண்மை, பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், அலுவலகங்களை அழகுபடுத்துதல், தூய்மைப் பிரச்சாரம் ஆகியவை இந்த பிரச்சாரத்தின் அளவுகோல்களாகும்.

அமைச்சகம், அதனுடன் இணைக்கப்பட்ட  சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அறிவுறுத்தி, இந்த இயக்கத்தை மிகவும் பொருத்தமான முறையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு அளவுருக்களின் கீழ் இலக்குகளை அடையாளம் காண்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அலுவலக கட்டிடங்கள், கட்டுமான முகாம்கள், சுங்கச்சாவடிகள், சாலையோர வசதிகள், சாலையோர தாபாக்கள், பேருந்து நிறுத்தங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சுமார் 15,000 இடங்கள், தூய்மைப் பிரச்சாரத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

---

(வெளியீட்டு ஐடி 2054423)


(Release ID: 2054506) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi , Punjabi