நிலக்கரி அமைச்சகம்
என்.எல்.சி இந்தியா நிலையான பசுமை முயற்சிகளில் கவனம் செலுத்தி தனது கார்ப்பரேட் திட்டம் 2030 மற்றும் விஷன் 2047 ஆகியவற்றை மறுமதிப்பீடு செய்துள்ளது
Posted On:
13 SEP 2024 11:27AM by PIB Chennai
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டியின் வழிகாட்டுதலுடன், நிலையான மற்றும் குறைந்த கார்பன் எதிர்காலத்தை நோக்கி, நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. COP 26-ல் உறுதியளித்தபடி, அதன் வளர்ச்சி இலக்குகளைப் பின்பற்றும்போது, குறைந்த கார்பன் உமிழ்வு பாதைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிமம் அல்லாத எரிசக்தி திறனை அடைவதை, நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு முன்னணி மற்றும் பொறுப்பான மத்திய பொதுத்துறை நிறுவனமாக, என்.எல்.சி இந்தியா நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல்), எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய இரட்டை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 2030-ம் ஆண்டிற்குள், அதன் மொத்த மின் உற்பத்தி திறனை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. என்.எல்.சி.ஐ.எல் அதன் மொத்த திட்டமிடப்பட்ட திறனில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) போர்ட்ஃபோலியோ கலவையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதன் RE திறனை 1.43 GW-லிருந்து 10.11 GW ஆக உயர்த்துகிறது.
மேற்கண்ட திட்டம், புதுப்பிக்கத்தக்க போர்ட்ஃபோலியோவில் ரூ. 50,000 கோடி (தோராயமாக) முதலீடு செய்கிறது. இது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை ஆதரிப்பதுடன் 2070-க்குள் 'நிகர பூஜ்ஜிய' உமிழ்வை அடைவதற்கான பரந்த நோக்கத்திற்கு பங்களிக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட இலக்கு, காலநிலை நடவடிக்கைக்கான இந்தியாவின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பாக COP26 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட அரசின் பஞ்சாமிர்தம் முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது.
நைஜல் (என்.எல்.சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்தி, நிறுவப்பட்ட என்.எல்.சி.ஐ.எல்-க்கு முழு சொந்தமான துணை நிறுவனம், நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போர்ட்ஃபோலியோவை வழிநடத்த உள்ளது. தற்போது, 2 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, NIGEL போட்டி ஏலத்தில் பங்கேற்பதன் மூலமும், பசுமை எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை ஆராய்வதன் மூலமும், அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விரிவாக்கம் மரபு சார்ந்த எரிசக்தி ஆதாரங்களை, இந்தியா சார்ந்திருப்பதைக் குறைப்பதுடன், எரிசக்தி உற்பத்தியை பன்முகப்படுத்தி, நிலக்கரி இறக்குமதியைக் குறைப்பதோடு, நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய இது உதவும்.
என்.எல்.சி.ஐ.எல் அதன் எரிசக்தி உற்பத்தி போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை 2030-ம் ஆண்டில் 50% லிருந்து 2047-ல் 77% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது, இதனால் நிறுவனம் 2070-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய உதவுகிறது. 2030-ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மாறிய எரிசக்தி நிலப்பரப்புடன், என்.எல்.சி.ஐ.எல் புதிய அனல் மின் திறன் அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வைக் குறைப்பதில், புதுமை செய்வது களத்தில் வழிகாட்டும் நடவடிக்கையாக இருக்கும்.
---
(Release ID: 2054409)
MM/KPG/KR
(Release ID: 2054472)
Visitor Counter : 47