மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இந்திய தரக் கவுன்சிலுக்கு உட்பட்ட தர மேம்பாட்டுக்கான தேசிய வாரியம் ஏற்பாடு செய்த தரமான கோடைகால கேளிக்க முகாம் 2024 விருது வழங்கும் விழாவில் திரு சஞ்சய் குமார் கலந்து கொண்டார்
Posted On:
13 SEP 2024 11:13AM by PIB Chennai
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்திற்குட்பட்ட பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார், 6 செப்டம்பர் 2024, அன்று, இந்திய தர கவுன்சிலுக்கு உட்பட்ட தர மேம்பாட்டுக்கான தேசிய வாரியம் (NBQP)-கீழ் ஏற்பாடு செய்த தரமான கோடைகால வேடிக்கை முகாமின் இரண்டாவது பதிப்பின் மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதிலுமிருந்து மாநில அரசு அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு சஞ்சய் குமார், அனுபவ கற்றலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். பள்ளி பாடத்திட்டத்தில் அனுபவ கற்றல் இணைக்கப்படும்போது, மாணவர்கள் தங்கள் கல்வியில் தீவிரப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் கற்றல் ஆர்வத்தை வளர்ப்பதுடன் எதிர்காலத்தில் ஏற்படும் தடைகளை சிறப்பாக எதிர்கொள்ள, அவர்களை தயார்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். எதிர்கால தரமான கோடைகால வேடிக்கை முகாம்களில் 10,00,000 மாணவர்கள் பங்கேற்க இலக்கு நிர்ணயித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள், கல்வி, தொழில் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
வரவேற்புரையாற்றிய என்.பி.க்யூ.பி.யின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஏ.ராஜ், மாணவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல், புதுமை இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு உண்மையான சான்றாகும் என்று கூறினார். இளைஞர்கள் தரமான பாரதம் இயக்கத்தின் ஒளிவிளக்காளர்களாக உள்ளனர், மேலும் கோடைகால கேளிக்க முகாம் போன்ற முயற்சிகள் மூலம், இளைஞர்கள் தரமான நடவடிக்கைகள் உடைய தேசத்தை நோக்கி, பொறுப்பை வழிநடத்த முன்னேறி வருவதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டின் கருப்பொருள், “பாதுகாப்கான நட்சத்திரங்கள்: தரத்துடன் ஒளிமயமாக பிரகாசிக்கிறது”, அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பு மற்றும் தரத்தின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுவதுடன் அடுத்த தலைமுறை இளம் தலைவர்களை, இந்த மதிப்புகளைத் தழுவ ஊக்குவித்தது. இந்த முகாம் 2024, ஏப்ரல் 15 முதல் 2024, ஜூலை 20 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.
தரமான கோடைகால கேளிக்கை முகாம், உணவு, வாழ்விடம், பொம்மைகள், சுகாதாரம், கல்வி மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரத்தின் மதிப்புகளை உட்பொதிப்பதன் மூலம், இந்தியாவின் எதிர்கால முடிவெடுப்பவர்களான குழந்தைகளின் கற்பனையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி, மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுடன் படைப்பாற்றலை இணைப்பதுடன் தொடர்ச்சியான, ஈர்க்கக்கூடிய போட்டிகள் மூலம் மேம்படுத்த முயல்கிறது.
இந்த ஆண்டு போட்டிகளில், இந்தியாவின் அனைத்து 36 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட உள்ளீடுகளுடன் பங்கேற்றதுடன், தரம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் வாழ்க்கையையும் சமூகங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்தியது. போட்டிகளில் கட்டுரை எழுதுதல், வரைதல் போட்டிகள், குறும்பட வீடியோ தயாரிப்பு மற்றும் வினாடி வினாக்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும், பாதுகாப்பான, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில், தரத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்க மாணவர்களை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெரும் பங்கேற்பதாக மற்றும் திறமையின் வலுவான காட்சிப்படுத்தலுடன், தரமான கோடைகால கேளிக்கை முகாம் 2024 இந்தியாவின் எதிர்காலத்தின் மூலக்கல்லாக, தரத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியது. நிகழ்ச்சி முடிவடைந்தபோது, பாதுகாப்பு நட்சத்திரங்களாக தங்களது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும், அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் தரத்தின் மதிப்புகள், புதுமை மற்றும் சிறப்பில் உலகளவில் முன்னோடியாக மாறுவதற்கான இந்தியாவின் பாதையை வடிவமைக்கும் என்றும் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டப்பட்டது.
----
(Release ID 2054403)
MM/KPG/KR
(Release ID: 2054471)
Visitor Counter : 45