ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறை 2024 அக்டோபர் 2 முதல் 31 அக்டோபர் வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 4.0 -ல் பங்கேற்கிறது
Posted On:
12 SEP 2024 6:31PM by PIB Chennai
தூய்மையை நிறுவனமயமாக்குதல், அரசு அலுவலகங்களில் நிலுவையிலுள்ள புகார்களை குறைத்தல் ஆகிய இலக்குகளை அடைவதற்காக, 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை சிறப்பு இயக்கம் 4.0 ஐ செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஊரக வளர்ச்சித் துறை 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை, நிலுவையில் உள்ள குறைகளை அகற்றுவதற்காக அதன் தன்னாட்சி அமைப்புகள் / அமைப்புகளுக்கு சிறப்பு இயக்கம் 4.0-க்கான வழிகாட்டுதல்களை விநியோகித்துள்ளது.
கடந்த ஆண்டில், ஊரக வளர்ச்சித் துறை, சிறப்பு இயக்கம் 3.0 (2 - 31 அக்டோபர், 2023) இன் கீழ் பொது குறைகள், பொதுமக்கள் குறை மேல்முறையீடுகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தியது. இயக்கத்தின் முடிவில், பிரதமர் அலுவலக குறிப்புகளில் 100%, மாநில குறிப்புகளில் 100%, என்ற இலக்கை அடைய முடிந்தது. அலுவலக இடவசதியை அதிகரித்தல், பொது இடங்களை தூய்மையாக வைத்தல், அலுவலக அறைகளை பராமரித்தல் ஆகியவற்றை உறுதி செய்ய இத்துறை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள தூய்மை இயக்கம் 4.0 க்கு தயாராகி வருகிறது,. இது தூய்மையை மேலும் நிறுவனமயமாக்குவதற்கும், துறை, அதன் தன்னாட்சி அமைப்பில் நிலுவையில் உள்ள விஷயங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
----------------
(Release ID: 2054253)
PLM/RS/KR
(Release ID: 2054426)
Visitor Counter : 55