அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
"உலகளாவிய உயிரி இந்தியா வெளியிடும் 30 புதுமையான புத்தொழில்கள் உயிரி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது”: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
12 SEP 2024 5:44PM by PIB Chennai
"உலகளாவிய உயிரி இந்தியா 30 புதுமையான புத்தொழில்களை வெளியிட்டு, உயிரி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது" என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலகளாவிய உயிரி இந்தியா 2024 தொடக்க விழாவில் கூறினார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அபரிமிதமான வளர்ச்சியை சாத்தியமாக்கியதற்காக உயிரி தொழில்நுட்பத் துறையை பாராட்டியதோடு, இந்தியாவின் உயிரி பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றார். 2014-ம் ஆண்டில் 10 பில்லியன் டாலரிலிருந்து 2024-ல் 130 பில்லியன் டாலராக உயர்ந்து, 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
'இந்தியா உயிரி பொருளாதார அறிக்கை 2024-ஐ எடுத்துரைத்தார். இது இந்திய உயிரி தொழில்நுட்ப தொழில்துறையின் தனித்துவமான முன்னேற்றத்தை காட்டுவதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054228
---------
IR/RS/DL
(Release ID: 2054269)
Visitor Counter : 54