பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 4 வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியை அறிவித்தது
Posted On:
11 SEP 2024 6:53PM by PIB Chennai
புதுதில்லி, செப்டம்பர் 11, 2024 புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு & கண்காட்சியை 2024, செப்டம்பர் 16 முதல் 18 வரை நடத்தும் என்று அறிவித்தார். இந்த உயர்மட்ட நிகழ்ச்சி டெல்லிக்கு வெளியே குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் முதல் முறையாக நடைபெறும். தூய்மையான எரிசக்தித் துறையை விரைவுபடுத்துவதற்கும், நமது பருவநிலை இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது என்பதை இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவம் அல்லாத எரிபொருள் நிறுவப்பட்ட திறனை அடைய இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் கோடி முதலீடு தேவை என்று அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த தலைமுறைக்கு பசுமையான நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இந்தியா அங்கீகரிக்கிறது எ்னறு அவர் கூறினார். இது ஒரு கனவு அல்ல பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள ஒரு கூட்டு இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ பிரல்ஹாத் ஜோஷி, முன்னதாக 9 செப்டம்பர் 2024 அன்று காந்திநகரில் RE-INVEST 2024 க்கான தயாரிப்புகள் குறித்த விரிவான மதிப்பாய்வை நடத்தினார். இந்த முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த திரு. ஜோஷி, இந்த நிகழ்ச்சியின் துல்லியமான திட்டமிடல் மற்றும் தயார்நிலையை பாராட்டினார். இந்த முக்கிய மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்கு இந்திய அரசு அளிக்கும் உயர்ந்த அளவிலான அர்ப்பணிப்பு மற்றும் முன்னுரிமையை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தூய்மையான எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்துவதில் அரசின் அர்ப்பணிப்பையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகத் தலைவராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதிலும் அரசின் அர்ப்பணிப்பை இந்த உன்னிப்பான தயாரிப்புகள் பிரதிபலிக்கின்றன.
----
PKV/KPG/KV
(Release ID: 2054167)
Visitor Counter : 34