பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது குறித்த மூன்று நாள் தேசிய பயிலரங்கு
Posted On:
11 SEP 2024 8:45PM by PIB Chennai
கிராம பஞ்சாயத்துகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது குறித்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசிய பயிலரங்கின் இரண்டாவது நாளில், 'சமூக ரீதியாக நியாயமான மற்றும் சமூக ரீதியாக பாதுகாக்கப்பட்ட பஞ்சாயத்துகள்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, கிராம பஞ்சாயத்து மட்டத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான உத்திசார் அணுகுமுறைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு அமித் யாதவ், தேசிய பயிலரங்கில் முக்கிய பேச்சாளராக உரையாற்றினார். நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு அணுகுமுறை மற்றும் 'முழுமையான அரசு' மற்றும் 'முழுமையான சமூகம்' உத்தி ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.
விரிவான சமூகப் பாதுகாப்பை அடைவதற்கு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளித்தலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கிராம பஞ்சாயத்து மட்டத்தில் சமூக நீதி தொடர்பான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கிராமப்புற சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் இல்லாத இந்தியா பிரச்சாரத்தில் பஞ்சாயத்துகள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு அமித் யாதவ், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பை உறுதி செய்ய கிராம சபைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டினார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த பயிலரங்கு இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அடிமட்ட அளவில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான உத்திகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன. இந்த நிகழ்ச்சியில் பீகார் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு மிஹிர் குமார் சிங், பஞ்சாயத்து ராஜ் அமைச்சக இணைச் செயலாளர் திரு விகாஸ் ஆனந்த்; பஞ்சாயத்து ராஜ் அமைச்சக இயக்குநர் திரு விபுல் உஜ்வால், பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் திரு ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2053923
*******************
BR/KV
(Release ID: 2054154)
Visitor Counter : 45