பாதுகாப்பு அமைச்சகம்
5-வது இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக் கூட்டம் மணிலாவில் நடைபெற்றது
Posted On:
11 SEP 2024 6:03PM by PIB Chennai
இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் (JDCC) ஐந்தாவது கூட்டம், செப்டம்பர் 11, 2024 அன்று மணிலாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை செயலர் திரு. கிரிதர் அரமானே மற்றும் பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த துணைச் செயலாளர் திரு. இரினியோ குரூஸ் எஸ்பினோ ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான விவாதங்களை பரிமாறிக் கொண்டனர். செப்டம்பர் 10, 2024 அன்று நடைபெற்ற மூன்றாவது சேவை-சேவைக்கான கலந்துரையாடல்களின் முடிவுகளை, இணைத் தலைமை நாடுகள் மதிப்பாய்வு செய்தன, மேலும் அனைத்து துறைகளிலும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒட்டுமொத்த மேம்பாடு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.
பிலிப்பைன்ஸ் அரசு, தனது ஆயுதப்படைகளை நவீனப்படுத்தியதற்காக, தற்சார்பு பாதுகாப்பு தோரணை சட்டத்தை பாதுகாப்புத் துறை செயலாளர் பாராட்டினார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கும் இதேபோன்ற பார்வையை இந்தியா வகுத்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்திய பாதுகாப்பு தொழில் துறை, தனது உற்பத்தி திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருவதுடன், உலகிற்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்திய பாதுகாப்பு தொழில்துறையுடன் இணைந்து, தளவாடங்களை கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியில் ஈடுபடுமாறு பிலிப்பைன்ஸூக்கு பாதுகாப்புத் துறை செயலாளர் அழைப்பு விடுத்தார். உறுதியான விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்காக நீண்டகால பங்கு கூட்டாண்மையில், முதலீடுகளையும் பிலிப்பைன்ஸ் அழைத்தது. பாதுகாப்புத் தொழில் உள்நாட்டுமயமாக்கலில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் நிரூபிக்கப்பட்ட மாதிரியை அது அங்கீகரித்து பாராட்டியது.
பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு என்ற இலக்கை அடைய ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது என்ற உறுதிப்பாட்டை இருதரப்பும் உறுதிப்படுத்தின. வெள்ளை கப்பல் தகவல் பரிமாற்றம் செயல்பாட்டுக்கு வருவதையும், மணிலாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவை விரைவில் தொடங்குவதையும் அவர்கள் பாராட்டினர்.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவின் ஒருங்கிணைப்பு நாடாக பிலிப்பைன்ஸை வரவேற்ற பாதுகாப்புத் துறை செயலாளர், பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதித்தார். இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தீவிரமான மற்றும் பன்முக உறவு உள்ளது, இது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது, பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் (பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர்) திரு. கில்பர்ட் எட்வர்டோ ஜெரார்டோ கோஜுவாங்கோ தியோடோரோ ஜூனியர்-ஐயும் பாதுகாப்புத் துறை செயலாளர் சந்தித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். முன்னதாக, பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் அவருக்கு முழு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே 2006-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஜே.டி.சி.சி கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. தூதரக உறவுகளின் 75 -வது ஆண்டு மற்றும் கிழக்கு நோக்கிய கொள்கையின் 10 ஆண்டுகளில், ஜே.டி.சி.சி.யின் இணைத் தலைமை செயலாளர் மட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
***
MM/RR/KV
(Release ID: 2054134)
Visitor Counter : 34